பண்டிகைக் காலத்தையொட்டி ஆதரவு தேவைப்படுவோருக்கு அன்பளிப்புப் பைகள்
This audio is generated by an AI tool.
சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள் ஆகியவற்றை முன்னிட்டு ஆதரவு தேவைப்படும் மூத்தோருக்கும் குடும்பங்களுக்கும் விழாக்கால அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
சமூக உண்டியலின் வருடாந்திர நிகழ்வில் சாதனை அளவாக 3,000 தொண்டூழியர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு 1,300 தொண்டூழியர்கள் பங்கெடுத்தனர்.
இன்றைய நிகழ்வில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்து கொண்டார்.
தொண்டூழியர்கள் ஏறக்குறைய 20,000 அன்பளிப்புகளைத் தயார் செய்தனர்.
பல்வேறு வகையான உணவுப் பொருட்களும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களும் வழங்கப்பட்டன.