Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் $110 மில்லிய்ன் செலுத்த ஒப்புக்கொண்ட Seatrium

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Seatrium நிறுவனம் பிரேசிலில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 110 மில்லியன் டாலரைச் செலுத்த ஒப்புக்கொண்டிருக்கிறது.

தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் அந்த விவரத்தை வெளியிட்டது.

குற்றவியல் குற்றச்சாட்டை ஒத்திவைக்க நிறுவனம் பல்வேறு நிபந்தனைகளை ஏற்பதன் அடிப்படையில் அந்தத் தொகையைச் செலுத்த Seatrium ஒப்புக்கொண்டிருக்கிறது.

Seatrium நிறுவனம் இன்று அந்த உடன்பாட்டில் பங்கேற்றதாக அலுவலகம் கூறியது.

இனி உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு விண்ணப்பம் செய்யப்படும்.

Sembcorp Marine, Keppel Offshore & Marine நிறுவனங்களை இணைத்து Seatrium நிறுவனம் 2023இல் அமைக்கப்பட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்