Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பல்வேறு குறைபாடுளைக் கொண்ட பிள்ளைகளுக்கென புதிய பள்ளி

வாசிப்புநேரம் -
பல்வேறு குறைபாடுளைக் கொண்ட பிள்ளைகளுக்கென புதிய பள்ளி

கோப்புப்படம்: MOE (படம்: Alvin Chong)

பல்வேறு குறைபாடுகள் கொண்ட பிள்ளைகளுக்கென சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் ஒரு புதிய பள்ளி திறக்கப்படவிருக்கிறது. 

அரசாங்க நிதி ஆதரவுடன் செயல்படும் இரண்டாவது சிறப்புப் பள்ளியாக அது இருக்கும். 

குறைந்தது இரண்டு குறைபாடுகள் கொண்ட பிள்ளைகள் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவர். 

தற்போது ஒரு பள்ளி பாசிர் ரிஸில் உள்ளது. அங்குப் பயிலும் 15 விழுக்காட்டு மாணவர்கள் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் வசிக்கின்றனர். 

சிறப்புத் தேவையுடைய அவர்கள், அதிகாலையில் எழுந்து பள்ளிக்குக் கிளம்ப வேண்டியுள்ளது. 

புதிய பள்ளி அந்தச் சிரமத்தைக் குறைக்கும், பயண நேரம் கணிசமாகக் குறையும் என்பதில் பெற்றோருக்கு நிம்மதி. 

மேலும் பாசிர் ரிஸ் பள்ளி அதிகபட்ச மாணவர் எண்ணிக்கையை எட்டிவிட்டது. 

2019ஆம் ஆண்டு மிதமான, கடுமையான குறைபாடுகள் கொண்டோருக்கான கட்டாயக் கல்விச் சட்டம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்கான பள்ளிகளுக்குத் தேவை அதிகரித்தது. 

கல்வி அமைச்சு, மூளை வளர்ச்சிக் குறைபாடு கொண்டோருக்கான நிலையத்துடன் இணைந்து புதிய பள்ளியை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

மிதமான அல்லது அதிகமான உதவி தேவைப்படும் பிள்ளைகள் தனித்து வாழத் தேவையான திறன்களைக் கற்பிப்பதில் பள்ளி கவனம் செலுத்தும். 

அதிகமான ஆசிரியர்களும் பணியமர்த்தப்படுவர் என்று கூறப்பட்டது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்