Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புகைபிடிப்பதால் வரும் தொல்லை: அரசாங்கம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

வாசிப்புநேரம் -
புகைபிடிப்பதால் வரும் தொல்லை: அரசாங்கம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

(படம்: AFP/Indranil Mukherjee)

அண்டைவீடுகளில் புகைபிடிக்கும்போது வரும் புகையால் ஏற்படும் பாதிப்புக் குறித்துக் கடந்த ஆண்டு தேசியச் சுற்றுப்புற அமைப்பு கிட்டத்தட்ட 600 புகார்களைப் பெற்றது.

மூன்றில் ஒரு சம்பவம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தவை.

இத்தகைய சம்பவங்களைக் குறைப்பதற்குக் கூடுதல் வழிகள் ஆராயப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

எனினும் ஒருவருடைய வீட்டிற்குள் விதிகளைச் செயல்படுத்துவதற்கு ஒரு வரையறை உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி பதிலளித்தார்.

ஒருவர் புகைபிடிப்பதால் மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு பொதுச் சுகாதார அக்கறையாக மாறுவதற்கு முன் இது குறித்த மறுஆய்வு நடத்தவேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.

இப்போதைக்குத் திட்டம் ஏதும் இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்