Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முகக்கவசத்தை அணியும்படிச் சொன்னதற்கு...பாதுகாவல் அதிகாரியைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்

வாசிப்புநேரம் -

முகக்கவசத்தை அணியும்படி சொன்னதற்குப் பாதுகாவல் அதிகாரியை ஆடவர் ஒருவர் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் நேற்று முன்தினம் (4 ஜூலை) தெம்பனிஸ் வணிகத் தொகுதியில் (Tampines Retail Park) இரவு 10.20 மணியளவில் நடந்தது.

அது குறித்து சிங்கப்பூர்ப் பாதுகாவல் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Giant பேரங்காடியின் நுழைவாயிலில் பாதுகாவல் அதிகாரி சுரேஷ் பெருமாள் பணிபுரிந்துகொண்டிருந்தார். 

வளாகத்திற்குள் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்வது அவரது கடமைகளில் ஒன்று.

அப்படி ஓர் ஆடவரிடம் கூறியபோது சினமடைந்த அவர்  திரு. பெருமாளைத் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டுப் பின்னர் வளாகத்திற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்புக் கேமரா பதிவுகளில் ஆடவர்  திரு. பெருமாளைத் தொடர்ந்து கவனிப்பது தெரிகிறது.

அவர் பின்னர் திரு. பெருமாளிடம் சென்று அவரைத் தாக்குவதும் தெரிகிறது. அருகில் இருந்த சிலர் ஆடவரைக் கட்டுப்படுத்தினர்.

திரு. பெருமாள் பதிலுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறிய பாதுகாவல் அமைப்பு, ஆடவரின் செயல்களைக் கடுமையாய்க் கண்டிப்பதாகச் சொன்னது.

இந்நிலையில், திரு. பெருமாள் பணிபுரியும் நிறுவனமான TwinRock சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக TODAY-இடம் கூறியது.

ஆதாரம் : Today

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்