Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'செய்தி' பொங்கல் போட்டியில் வாழ்த்து அட்டை தயாரித்து வெற்றி பெற்ற தொடக்கநிலை மாணவர்கள்

வாசிப்புநேரம் -

'செய்தி'-இன் பொங்கலோ பொங்கல் 2023!

'செய்தி' ஏற்பாடு செய்திருந்த பொங்கல் போட்டியில் தொடக்கநிலை மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு தொடக்கநிலை 3, 4 இல் பயிலும் மாணவர்களுக்குக் கற்பனைக்கு எட்டிய வகையில், மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களைக் கொண்டு பொங்கல் வாழ்த்து அட்டையைத் தயாரிக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகை, அதன் முக்கியத்துவம், அதில் பின்பற்றப்படும் சிறப்பு வழக்கங்கள் ஆகியவற்றை விளக்கிய பின் மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து ஒப்படைக்கவேண்டும்.

மாணவர்களிடையே பொங்கல் குறித்த புரிந்துணர்வை அதிகரிப்பது போட்டியின் நோக்கம்.

மொத்தம் 75 மாணவர்கள் அதில் கலந்துகொண்டனர்.

அதில் சிறந்த 12 படைப்புகளை 'செய்தி' குழு தேர்ந்தெடுத்தது:

தொடக்கநிலை 3:

  • சித்தார்த் (Sidharth, Jiemin Primary School)
  • அனிதா அருண் (Anita Arun, Haig Girls' School)
  • மஹாலக்ஷ்மி (Mahalakshmi, Junyuan Primary School)
  • கவிபிரியா (Kavipriya, Ngee Ann Primary School)
  • ரசீம் (Raseem, Teck Whye Primary School)
  • அலிசா (Alisa, St. Margaret Primary School)

தொடக்கநிலை 4:

  • யாதவன் யுவனேஸ்வரன் (Yaddavan Yuvaneswaran, Cantonment Primary School)
  • ஈஷாயினி (Eeshayini, Chongfu Primary School)
  • சக்தி (Shakthi, Henry Park Primary School)
  • ரக்ஷன்யா (Rakshanya, Horizon Primary School)
  • முகிஷா (Mukisha, Clementi Primary School)
  • விஷாகன் (Vishagan, Chongfu Primary School)
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்