Skip to main content
"செய்தி"யின் பொங்கல் போட்டி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"செய்தி"யின் பொங்கல் போட்டி - புதிய பள்ளிகள் வரவு....அமோக வரவேற்பு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப் 'செய்தி', பொங்கலை ஒட்டித் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக நடத்திய “பொங்கலோ பொங்கல் 2025" போட்டிக்கு அமோக ஆதரவு கிடைத்தது.

8ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில் 70க்கும் அதிகமான பள்ளிகள் பங்கேற்றன.

வகுப்பில் போட்டியை நடத்தி ஒரு நிலைக்கு 2 சிறந்த படைப்புகளைத் தெரிவுசெய்து அனுப்பும்படி ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆண்டுக்கு ஆண்டு போட்டியில் பங்கேற்கும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.

ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவர்களுக்குக் கொடுக்கும் உற்சாகமே இதற்குக் காரணம் என்று "செய்தி" நம்புகிறது.

"பொங்கல் கொண்டாட்ட உணர்வை மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்க நடத்தப்படும் இந்தப் போட்டியை ஒவ்வோர் ஆண்டும் எதிர்பார்த்துக் காத்திருப்பதில் தனி மகிழ்ச்சி" என்று ஆசிரியர்களில் ஒருவர் "செய்தி"யிடம் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் நடத்தப்படும் இந்தப் போட்டியைப் பெரிதும் வரவேற்பதாகக் கூறிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு 'செய்தி'க்கு நன்றி தெரிவித்தனர்.

மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியில் பங்கேற்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பல ஆசிரியர்கள் கூறினர்.

தொடக்கநிலை 1 முதல் தொடக்கநிலை 5 வரை பயிலும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

மாணவர்கள் அனுப்பிவைத்த படைப்புகள்

தொடக்கநிலை 1: 146 படைப்புகள்
தொடக்கநிலை 2: 143 படைப்புகள்
தொடக்கநிலை 3: 123 படைப்புகள்
தொடக்கநிலை 4: 68 படைப்புகள்
தொடக்கநிலை 5: 87 படைப்புகள்

தொடக்கநிலை 1 மாணவர்களுக்குப் பொங்கல் வண்ணம் தீட்டும் போட்டி நடத்தப்பட்டது.
 

Related article image
தொடக்கநிலை 2, 3இல் பயிலும் மாணவர்கள் படத்தைப் பார்த்து மற்றொரு பாதியை வரைந்து வண்ணம் தீட்டும் போட்டியில் கலந்துகொண்டனர்.
Related article image

தொடக்கநிலை 4, 5ஐச் சேர்ந்த மாணவர்கள் "குடும்பங்களை ஒன்றிணைக்கும் பொங்கல்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதும் போட்டியில் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களின் பெயர்கள், அவர்கள் பயிலும் பள்ளிகளின் பெயர்கள், அவர்களது படைப்புகள் அனைத்தும் "செய்தி" இணையத்தளம், செயலியில் வெளியிடப்படும். 

வெற்றி பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 வெள்ளிப் பற்றுச்சீட்டு வழங்கப்படும். அவை விரைவில் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்படும்.

மாணவர்களுக்குச் 'செய்தி'யின் வாழ்த்துகள்!

வெற்றியாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். தொடர்ந்து "செய்தி"யுடன் இணைந்திருங்கள்!
 

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்