சிங்கப்பூர் exclusive
சின்னக் கைகள், சிரிப்பும் கொண்டாட்டமும்- 'செய்தி'யின் பொங்கலோ பொங்கல்
வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் நிறுவனத்தின் செய்திப் பிரிவு, பொங்கல் திருநாளையொட்டி 9ஆவது ஆண்டாகப் “பொங்கலோ பொங்கல் 2026” போட்டியை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக 'செய்தி' இன்று "பொங்கலோ பொங்கல் 2026" என்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தியது.
நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என 40 பேர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
அதில் ஒன்று Jigsaw Puzzle எனும் பொங்கல் தொடர்பான படங்களை இணைப்பது.

மாணவர்களும் ஆசிரியர்களும் குழுவாகப் பிரிந்து மிகுந்த உற்சாகத்துடனும் விரைவாகவும் படங்களை இணைத்து முடித்தனர்.
அடுத்ததாகச் சொல் விளையாட்டு....
கொடுக்கப்பட்ட வாக்கியங்களை வைத்து மாணவர்கள் சொற்களைக் கண்டுபிடித்தனர்.
அந்தச் சொற்களைக் கொண்டு அவர்கள் குழுவாகக் கதை உருவாக்கி அதனை முன்வந்து படைத்தனர்.
இந்த நடவடிக்கையில் புதிய சொற்களையும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

பாரம்பரியக் கலைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மாணவர்கள் வில்லுப்பாட்டுப் பற்றித் தெரிந்துகொண்டனர்.
தொடர் நடவடிக்கையாக மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வரிகளைக் கொண்டு மெட்டுப் போட்டு குழுவாகப் பாடல்களைப் பாடினர்.

ஆசிரியர்கள் இசைக்கருவியை இசைக்க மாணவர்கள் அதற்கேற்பப் பாடல் பாடி சிரித்து மகிழ்ந்தனர்.
ஆசிரியர்களையும் மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களோடு கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள 'செய்தி'க்கு இது ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது.
சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
ஆதாரம் : Mediacorp Seithi