சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"நீ சூன் குழுத்தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட நால்வரும் மக்களுக்குச் சேவையாற்றுவதில் புதுமுகங்கள் அல்ல..மிகுந்த அனுபவம் கொண்டவர்கள்" - அமைச்சர் சண்முகம்
வாசிப்புநேரம் -

மக்கள் செயல் கட்சி, நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அணியை இன்று அறிவித்துள்ளது.
அமைச்சர் சண்முகம் தலைமையில் குழு
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் சையத் ஹருன் (Syed Harun), கோ ஹன்யான் (Goh Hanyan), ஜாக்சன் லாம் (Jackson Lam), லீ ஹுய் யிங் ( Lee Hui Ying) ஆகிய 4 புதுமுகங்களும் இன்று அறிமுகம் செய்யப்பட்டனர்.
"நால்வரும் பல ஆண்டுகளாக நீ சூன் குழுத்தொகுதியில் தொண்டூழியம் செய்து வருகின்றனர். ஜாக்சன் இங்குப் பிறந்து வளர்ந்தவர். எந்தவொரு சவாலையும் சமாளிக்கக்கூடியவர். நீ சூன் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா, ஹுய் யிங்கிற்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அவரைத் தொண்டூழியம் செய்ய ஊக்கமளித்தார். ஹரூன் மலாய்-முஸ்லிம் சமூகத்தில் பலருக்கும் நன்கு அறிமுகமானவர். அதுபோக இளையர்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றியும் நன்கு தெரிந்தவர். மக்களுடன் நன்றாகப் பேசிப் பழகக்கூடியவர். ஹன்யான் மீது பலர் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கின்றனர்," என்றார் அமைச்சர் சண்முகம்.
நீ சூன் குழுத்தொகுதியின் தேவைகளைப் புரிந்துகொண்டு நால்வரையும் தாம் கைப்பட தேர்ந்தெடுத்ததாக அவர் 'செய்தி'யிடம் கூறினார்.
அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் நீ சூன் குடியிருப்பாளர்களுக்கு உதவுவர் என்றும் தாம் நம்புவதாக அமைச்சர் சண்முகம் சொன்னார்.

ஆதாரம் : Mediacorp Seithi