Skip to main content
சிலேத்தார் கடைத்தொகுதி மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிலேத்தார் கடைத்தொகுதி மின்-படிக்கட்டில் சைக்கிளோட்டும் போட்டி

வாசிப்புநேரம் -
சிலேத்தார் (Seletar) கடைத்தொகுதியில் ஒரு வித்தியாசமான சைக்கிள் ஓட்டும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

போட்டியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கும் மின்-படிக்கட்டுகளில் சைக்கிள் ஓட்டவேண்டும்.

Downmall Challenge எனும் போட்டி கடந்த சனிக்கிழமை (28 பிப்ரவரி) இரவு 10 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

போட்டியில் 58 பேர் பங்கேற்றனர்.

சிலேத்தார் கடைத்தொகுதியை விளம்பரப்படுத்துவதே போட்டியின் நோக்கம்.

பிப்ரவரி 28 முதல் ஜூன் 28 வரை சிலேத்தார் கடைத்தொகுதி அதிகாலை 4 மணி வரைக்கும் திறந்திருக்கும்.

இதற்குமுன் இரவு 10 மணிக்குக் கடைத்தொகுதி மூடப்பட்டது.

இரவில் விழித்திருக்க விரும்புவோரை ஈர்க்கக் கடைத்தொகுதியில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் சைக்கிள் ஓட்டும் போட்டி தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் அந்தப் புதுமையான போட்டியை வரவேற்றனர்.

மற்றவர்கள் சைக்கிள் ஓட்டும் போட்டி நடத்துவதற்குக் கடைத்தொகுதி உகந்த இடம் அல்ல, போட்டி ஆபத்தானது என்று கூறினர்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்