Skip to main content
ஏப்ரல் 1
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஏப்ரல் 1 - பொங்கோலில் ஓட்டுநர் இல்லாத பேருந்து அறிமுகம்

வாசிப்புநேரம் -
ஏப்ரல் 1 - பொங்கோலில் ஓட்டுநர் இல்லாத பேருந்து அறிமுகம்
(CNA/Erin Liam)
பொங்கோல் வட்டாரத்தில் ஓட்டுநர் இல்லாத பேருந்துச் சேவையை அடுத்த மாதம் முதல் பொது மக்கள் நாடலாம்.

போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் (Jeffrey Siow) நாடாளுமன்றத்தில் இன்று அதைத் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் முதல் அந்தச் சேவை சோதிக்கப்பட்டு வந்தது.

அதன் மூலம்
ஓட்டுநர் இல்லாத தானியக்க வாகனங்கள் சிங்கப்பூரில் எவ்வாறு இயங்க முடியும் என்பது ஆராயப்பட்டது என்று அமைச்சர் சொன்னார்.

நேரடிப் போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் புதிய இடைவழிப் பேருந்துச் சேவை பயணிகளுக்குக் கைகொடுக்கும்.

பயண நேரம் 15 நிமிடம் வரை குறைகிறது.

தானியக்க பேருந்துச் சேவைகள் அறிமுகமானதும் ஆரம்பக் கட்டத்தில் பயணிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

இந்த ஆண்டின் நடுப்பகுதி முதல் அவர்கள் நான்கு வெள்ளி செலுத்தவேண்டும்.

பொங்கோலில் தானியக்கப் பேருந்துகள் சிறப்பாக இயங்கினால் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

எதிர்காலத்தில் செந்தோசா, துவாஸ், மண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டுநர் இல்லாப் பேருந்துகளை எதிர்பார்க்கலாம்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்