Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

மழை நீரைச் சேகரித்து, சுத்திகரிக்கும் வசதியும் அங்கு உள்ளது.

புதிய நிலையத்தின் மூலம் ஆண்டுக்குச் சுமார் 4,700 வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கலாம். 68 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பும் அளவு மழைநீரைச் சுத்திகரிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மழைமேகம் சூழ்ந்த நாள்களில் சூரிய சக்தித் தகடுகளுக்குப் போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை.

மழைக்காலத்தில்... நீர்ச்சேகரிப்பு முறை செயல்படும்.

அங்கு ஆண்டுக்கு 170,000 கனமீட்டர் மழை நீரைச் சேகரித்துச் சுத்திகரிக்கலாம்.

மழையோ, வெயிலோ எந்த நேரமாக இருந்தாலும் பணிகள் தொடரும்.

சூரிய சக்தித் தகடுகளுக்குக் கீழே குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் வழியே செல்லும் மழைநீர் நிலத்தடித் தொட்டியில் சேகரிக்கப்படும்.
முதற்கட்டமாக, அங்கேயே மழை நீர் சுத்திகரிக்கப்பட்டுச் சூரிய சக்திகளைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும்.

தேவைக்கேற்ப நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றலாம் என்று கூறுகிறது Sembcorp நிறுவனம்.

துவாஸில் சுமார் 10 ஹெக்டர் பரப்பளவு இடத்தில் நிலையம் தற்காலிகமாகச் செயல்படுகிறது. அங்குள்ள கருவிகளை எடுத்துச்சென்று ஆறு மாதத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்றமுடியும்.

2030க்குள் சூரிய சக்தி மூலம் குறைந்தது 2 கிகாவாட் மின்சாரம் தயாரிக்க முனையும் சிங்கப்பூருக்கு நிலையம் பெரிதும் உதவும்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்