செங்காங் கழக வீட்டில் தீ
வாசிப்புநேரம் -
செங்காங் (Sengkang) வட்டாரத்தில் உள்ள கழக வீட்டில் தீ ஏற்பட்டுள்ளது.
மின்னிலக்கச் சாதனத்தை மின்னூட்டும்போது தீ மூண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
செங்காங்கில் ஃபென்விக் சௌத்தில் (Fenwick South) நேற்று அதிகாலை 3 மணிக்குச் சம்பவம் ஏற்பட்டதாக 8World செய்தித்தளம் கூறியது.
தீ வீட்டில் பரவுவதை உணர்ந்து பாதி தூக்கத்திலிருந்து எழுந்த வீட்டின் உரிமையாளர் 4 தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சி செய்தார்.
ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தீயை அணைத்தது.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் லாய் (Victor Lye) தீயால் பாதிக்கப்பட்ட வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார்.
அது குறித்து அவர் Facebook பக்கத்தில் பதிவிட்டார்.
தீயால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சுத்தம் செய்வதில் உதவி புரிந்த நகர மன்றத்துக்குத் திரு லாய் நன்றி தெரிவித்தார்.
அங்கீகாரம் பெற்ற மின்னூட்டச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். மின்னூட்டி முடிந்ததும் அணைக்க வேண்டும் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

ஆதாரம் : Others/8world