Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செங்காங், பொங்கோல் இலகு ரயில் (LRT) தடத்தில் நான்கு மாதங்களுக்குப் பயணிகள் சேவை நேரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவிருக்கும் SBS Transit

வாசிப்புநேரம் -

செங்காங், பொங்கோல் இலகு ரயில் (LRT) தடத்தில் பயணிகள் சேவை நேரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது SBS Transit நிறுவனம்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படும்.

SBS Transit நிறுவனம் அதுகுறித்த விவரங்களை அதன் Facebook பக்கத்தில் வெளியிட்டது.

பராமரிப்புப் பணிகள் வரும் சனிக்கிழமை (21 மே) தொடங்கும். செப்டம்பர் மாதத்தின் இறுதி வாரம் வரை பணிகள் தொடரும் என்று நிறுவனம் தெரிவித்தது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு நடைமேடையில் ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும். மற்ற பாதை, பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படும்.

ரயில் சேவைகள் நம்பகமானதாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரவு நேரங்களில் குடியிருப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க, பகலில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதாக நிறுவனம் சொன்னது.

பராமரிப்பு வேலை அட்டவணையை நிறுவனம் அதன் Facebook பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்