Skip to main content
புகைமூட்ட விவகாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புகைமூட்ட விவகாரம் - பலியாட்டைத் தேடுவது எண்ணமில்லை: மூத்த அமைச்சர் சண்முகம்

வாசிப்புநேரம் -
புகைமூட்ட விவகாரம் - பலியாட்டைத் தேடுவது எண்ணமில்லை: மூத்த அமைச்சர் சண்முகம்

படம்: CNA/Lim Li Ting

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

புகைமூட்டத்துக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள பலியாடுகளைத் தேடுவது சிங்கப்பூரின் எண்ணமில்லை என்று மூத்த அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.

எல்லைதாண்டிய புகைமூட்டத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய 10 நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

சந்திப்பில் துணைப்பிரதமர் கான் கிம் யொங்கும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் (Grace Fu) கலந்துகொண்டனர்.

காட்டுத்தீக்குக் காரணமான நிறுவனங்கள் பொறுப்பேற்றுக்கொள்ள அரசாங்கம் அனைத்துச் சட்ட வழிகளையும் பயன்படுத்தும் என்று திரு சண்முகம் எச்சரித்தார்.

"புகைமூட்டம் தீயின் விளைவு; தீ பொறுப்பற்ற வர்த்தகத்தின் விளைவு; அது இயற்கை நிகழ்வு அல்ல," என்று அவர் கூறினார்.

புகைமூட்டத்தை ஏற்படுத்தாமல் இருக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் பொறுப்பு உள்ளது என்று அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட 10 நிறுவனங்களிடம் தகவல் கேட்டு தேசியச் சுற்றுப்புற அமைப்பு சட்ட அறிக்கையை அனுப்பியுள்ளது.

அதன்படி நிறுவனங்கள் தங்களது வர்த்தக விவரங்கள், விநியோகத் தொடர்பு, வர்த்தகத் தொடர்பு ஆகியவை குறித்து விவரம் அளிக்கவேண்டும்.

அதற்கு ஒத்துழைக்க 10 நிறுவனங்களும் இணங்கியுள்ளன.

அதனைத் திரு சண்முகம் வரவேற்றார்.

காட்டுத்தீக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள பலியாடுகளைத் தேடுவது அரசாங்கத்தின் நோக்கமில்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

உண்மையைக் கண்டுபிடிக்க விவரங்கள் கவனமாக ஆராயப்படும் என்றார் அவர்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்