Skip to main content
பஹாங்கில் மூத்த அமைச்சர் லீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பஹாங்கில் மூத்த அமைச்சர் லீ

வாசிப்புநேரம் -
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் (Lee Hsien Loong) பஹாங் முதலமைச்சர் வான் ரோசி வான் இஸ்மாயிலும் (Wan Rosy Wan Ismail) இருதரப்பு உறவு நல்ல முறையில் அமைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

முதல் முறையாகச் சந்தித்துக்கொண்ட தலைவர்கள் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் பேசினர்.

தலைவர்களுக்கு இடையிலான உறுதியான நட்பை வெளிக்காட்டும் தருணமாக அது அமைந்தது.

சிங்கப்பூருக்கும் பஹாங் மாநிலத்துக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவையும் அது பிரதிபலிக்கிறது.

திரு லீ மலேசியாவுக்கு மேற்கொண்டிருக்கும் ஐந்து நாள் பயணத்தின் ஒருபகுதியாக அது அமைந்துள்ளது.

பஹாங் அரசக் குடும்பத்தினர் திரு லீக்கு மதிய விருந்தளித்துச் சிறப்பித்தனர்.

பின்னர் திரு லீ சுல்தான் அபு பக்கர் அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தார்.

மாநிலத்தின் வளமான வரலாற்றைக் கூறும் கலைப்பொருள்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்