Skip to main content
"ஜாலான் காயு மக்களுக்குச் சேவையாற்ற காத்திருக்கிறேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"ஜாலான் காயு மக்களுக்குச் சேவையாற்ற காத்திருக்கிறேன்" - மூத்த அமைச்சர் லீ

வாசிப்புநேரம் -
"ஜாலான் காயு மக்களுக்குச் சேவையாற்ற காத்திருக்கிறேன்" - மூத்த அமைச்சர் லீ

படம்: Lee Hsien Loong/Facebook

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜாலான் காயு (Jalan Kayu) தனித்தொகுதியில் உள்ள குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்ற காத்திருப்பதாய்க் கூறியிருக்கிறார்.

அந்தத் தனித்தொகுதி அங் மோ கியோ (Ang Mo Kio) நகர மன்றத்தின் ஒரு பகுதியாக வருகிறது.

திரு லீ தமது கருத்தைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

தற்போது உள்ள இயோ சு காங் (Yio Chu Kang), கெபுன் பாரு (Kebun Bahru) போன்ற தனித்தொகுதிகளில் உள்ள அதே ஏற்பாடுகள் ஜாலான் காயு தனித்தொகுதியிலும் செய்யப்படும் என்றார் திரு லீ.

தொகுதி எல்லைகள் மறு ஆய்வுக்குழு வெளியிட்ட அறிக்கையில் அங் மோ கியோ குழுத் தொகுதியிலிருந்து ஜாலான் காயு தனித்தொகுதியை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

ஜாலான் காயு ரோடு, சிலேத்தார் விண்வெளிப் பூங்கா ஆகிய இடங்களில் உள்ள தனியார் வீடுகள், ஃபெர்ன்வேல் குடியிருப்புப் பேட்டையில் உள்ள சில வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் ஆகியவை அந்தத் தனித்தொகுதியின் கீழ் வரும்.

அங் மோ கியோ குழுத்தொகுதியின் அளவைக் குறைக்கத் தனித்தொகுதி அமைப்பது இயற்கையான நடைமுறை என்று மூத்த அமைச்சர் லீ கூறினார்.

மற்ற தொகுதிகளைவிட அங் மோ கியோ குழுத்தொகுதியில் அதிகமான வாக்காளர்கள் இருப்பதை அவர் சுட்டினார்.
ஆதாரம் : Others/Facebook

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்