Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆஸ்திரேலியக் கௌரவத் தோழராக அங்கீகாரம் பெற்றார் மூத்த அமைச்சர் லீ

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியக் கௌரவத் தோழராக அங்கீகாரம் பெற்றார் மூத்த அமைச்சர் லீ

(படம்: Ministry of Digital Development and Information)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கைக் (Lee Hsien Loong) கௌரவத் தோழராக ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.

சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் உள்ள இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் கடந்த 40 ஆண்டுகளாக அவர் ஆற்றிய பெரும் பங்கிற்காக அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

திரு லீ பிரதமராகயிருந்த காலக்கட்டத்தில் இரு நாடுகளின் பொருளாதாரப் பாங்காளித்துவம் பெருமளவு வளர்ந்தது.

ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளி என்ற பெருமையையும் சிங்கப்பூர் பெற்றுள்ளது.

நாட்டிற்கு மிகச் சிறந்த தொண்டாற்றியவர்களுக்கும், சாதனை படைத்தவர்களுக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கும் ஆக உயரிய விருது Order of Australia.

ஆஸ்திரேலியர்களுக்கும், மற்ற நாட்டவருக்கும் வழங்கப்படும் அந்த விருதின் ஓர் அங்கமாக அளிக்கப்படும் பொதுப் பிரிவு கௌரவத் தோழர் விருது இம்முறை திரு லீக்கு வழங்கப்பட்டுள்ளது.

 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்