மூத்தோர் கீழே விழும் அபாயத்தைக் குறைக்க உதவும் திட்டங்களில் பலன்
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் (Ong Ye Kung), மூத்தோர் கீழே விழும் அபாயத்தைக் குறைக்க உதவும் திட்டங்களில் பலன் தெரிந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் திட்டங்களில் கலந்துகொண்டவர்களில் 10இல் 7 பேர் பலம், நடக்கும் வேகம் உள்ளிட்ட அம்சங்களில் மேம்பாடுகளைக் கண்டிருப்பதாக அவர் சொன்னார்.
SportSG அமைப்பின் CALM திட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 85 விழுக்காட்டு மூத்தோர் 5இல் 3 அம்சங்களில் முன்னேற்றம் கண்டனர்.
கைப்பிடி வலிமை, நடக்கும் வேகம் உள்ளிட்ட அம்சங்கள் அவற்றில் அடங்கும்.
அந்தத் திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் மேலும் 10,000 மூத்தோரிடம் கொண்டுசேர்க்க வாரியமும் SportSG அமைப்பும் திட்டமிடுகின்றன என்று திரு ஓங் கூறினார்.
கீழே விழும் அபாயம் குறித்து அரசாங்கம் கடந்த ஐந்தாண்டுகளில் நடத்திய திட்டங்களில் எத்தனை மூத்தோர் கலந்துகொண்டனர் என்று பொத்தோங் பாசிர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் இயோ (Alex Yeo) நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தார்.
கடந்த ஐந்தாண்டுகளில் வாரியமும் SportSG அமைப்பும் நடத்திய திட்டங்களில் சுமார் 25,000 பேர் கலந்துகொண்டதாகத் திரு ஓங் கூறினார்.

ஆதாரம் : Mediacorp Seithi