Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கேலாங் செராய் வட்டாரத்தில் வசிக்கும் மூத்தோருக்குப் புதிய சுகாதார நிலையம்

வாசிப்புநேரம் -
கேலாங் செராய் வட்டாரத்தில் வசிக்கும் மூத்தோர் அனைத்துச் சுகாதாரச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற ஒரு புதிய நிலையம் வருகிறது.

2025ஆம் ஆண்டுக்குள் அது தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kampung Eunos Network என்றழைக்கப்படும் நிலையத்தின்வழி் மூத்தோருக்குத் தேவையான சேவைகளும் திட்டங்களும் எளிதாகக் கிடைக்கும்.

தெம்புசு துடிப்பான மூத்தோர் நிலையம் போன்ற சமூகச்சேவைப் பங்காளிகளுடன் இணைந்து சேவைகள் வழங்கப்படும்.

இவ்வாறு வளங்களை ஒருங்கிணைப்பதன்மூலம் குடியிருப்பாளர்களுக்குத் திட்டமிட்டுச் சேவையாற்ற முடிவதாகக் கூறப்பட்டது.

கம்போங் யூனோஸ் சுகாதாரச் சேவை நிலையத்தின் தொடக்கநிகழ்ச்சியில் முந்நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முப்பரிமாண சைக்கிளோட்டம், மெய்நிகர் தொழில்நுட்பத்தில் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளும் மூத்தோருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

உடற்குறையுள்ள குடியிருப்பாளர்கள் வேலைதேடிக்கொள்ள கேக் செய்யும் வகுப்பும் நடத்தப்பட்டது.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்