Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிள்ளைகளிடையே கடுமையான பாதிப்பு இல்லை"

வாசிப்புநேரம் -
"COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிள்ளைகளிடையே கடுமையான பாதிப்பு இல்லை"

(படம்: MSF)

கடந்த மாதம் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பிள்ளைகளிடையே கடுமையான பாதிப்பு பதிவாகவில்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் இறுதியில் 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

அதில் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட Pfizer-BioNTech/Comirnaty தடுப்பூசி 20,327 முறை போடப்பட்டது.

கடுமையற்ற பக்கவிளைவுகள் குறித்து 6 புகார்கள் பதிவானதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் மூவருக்கு ஒவ்வாமை இருந்ததாகவும் ஒருவருக்கு மயக்கம், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததாகவும் ஆணையம் சொன்னது.

12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளிடையே கடுமையான பக்கவிளைவுகள் தொடர்பில் 1,170
புகார்கள் பெற்றதாக ஆணையம் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்டோரில் 83 பேருக்கு myocarditis, pericarditis, tachycardia போன்ற ஒவ்வாமைப் பாதிப்பு இருந்தது.

இந்நிலையில், Booster எனும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடையே மோசமான பக்கவிளைவு குறித்து 49 புகார்கள் பதிவாயின.

இதுவரை 2.2 மில்லியன் முறை Booster தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதய வீக்கம் தொடர்பிலான myocarditis, pericarditis பக்கவிளைவு குறித்து 10 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் Pfizer தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று ஆணையம் சொன்னது.

Booster தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 70 விழுக்காட்டினர் Pfizer தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதை அது சுட்டியது.

- CNA/vc(aj)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa