Skip to main content
ஏழு கிலோ கஞ்சா பறிமுதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஏழு கிலோ கஞ்சா பறிமுதல் - சிங்கப்பூர்ப் பெண் கைது

வாசிப்புநேரம் -
ஏழு கிலோ கஞ்சா பறிமுதல் - சிங்கப்பூர்ப் பெண் கைது
படம்: மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் 7 கிலோகிராம் கஞ்சா உட்பட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

அதன் தொடர்பில் 29 வயதுச் சிங்கப்பூர்ப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நேற்று முன்தினம் (ஜனவரி 8) நடந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு 94,900 வெள்ளிக்குமேல்.

அது சுமார் 1,110 போதைப்புழங்கிகள் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவு.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் வெஸ்ட் கோஸ்ட் வேயிலிருக்கும் கூட்டுரிமை வீட்டில் சோதனை நடத்தியபோது பெண் கைது செய்யப்பட்டார்.

அதிகாரிகளுடன் முதலில் ஒத்துழைக்காததால் அவர்கள் வல்லந்தமாக வீட்டுக்கதவை உடைத்துப் பெண்ணைக் கைது செய்தனர்.

வீட்டில் 7 கிலோகிராம் கஞ்சாவைத் தவிர 169 கிராம் ஐஸ் (Ice), 9 கிராம் கெட்டமைன் (ketamine), 30 கிராம் ecstasy, 30 Erimin-5 மாத்திரைகளோடு மேலும் சில பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

500 கிராமுக்கும் மேலான கஞ்சாவைச் சிங்கப்பூருக்குள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்