Skip to main content
ஜொகூர் சாலை விபத்தில் 7 வயதுச் சிங்கப்பூர்ச் சிறுவன் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஜொகூர் சாலை விபத்தில் 7 வயதுச் சிங்கப்பூர்ச் சிறுவன் மரணம்

வாசிப்புநேரம் -
ஜொகூர் சாலை விபத்தில் 7 வயதுச் சிங்கப்பூர்ச் சிறுவன் மரணம்

(படம்: Facebook/Polis Daerah Johor Bahru Selatan)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜொகூர் பாருவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 வயதுச் சிங்கப்பூர்ச் சிறுவன் மாண்டான்.

காரும் லாரியும் சம்பந்தப்பட்ட விபத்து அது.

விபத்து நேற்றிரவு (16 மார்ச்) 10.34 மணிக்கு ஏற்பட்டதாக ஜொகூர் பாரு சௌத் காவல்துறை தெரிவித்தது. மலேசியாவின் The Star பத்திரிகை அந்தச் செய்தியை வெளியிட்டது.

அதன் தொடர்பில் 57 வயது லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டபோது அவர் methamphetamine போதைப்பொருளை உட்கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அவரிடம் வாகனமோட்டும் உரிமம் இல்லை என்பதும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்தது.

அவரது லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கார் சிங்கப்பூரில் பதிவுபெற்றது.

காரை 44 வயதுச் சிங்கப்பூர் ஆடவர் ஓட்டி வந்தார். அவருடன் 4 பேர் இருந்தனர். அவர்கள் 2 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

காரில் இருந்த மொத்தம் 5 பேரில் நால்வர் சிங்கப்பூரர். ஒருவர் இந்தோனேசியர்.

விபத்தின்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன் காருக்கு வெளியே தூக்கியெறிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சையின்போது மாண்டான்.

காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேல்விவரங்களுக்கு CNA, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சைத் தொடர்புகொண்டுள்ளது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்