சீன முட்டைகோஸில் நச்சு ரசாயனம்? சிங்கப்பூரில் கூடுதல் சோதனை
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: AFP/CN-STR)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சீனாவிலிருந்து வரும் முட்டைகோஸ்கள் சோதிக்கப்படுவதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் முட்டைகோஸ்களில் formaldehyde எனும் நச்சு ரசாயனம் பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலைமையை அணுக்கமாய்க் கண்காணிப்பதாக அமைப்பு கூறியது.
சோதனையை அதிகரித்துள்ளதாகவும் அது சொன்னது.
அண்மையில் தென்கொரியாவும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகோஸ்மீது சோதனையை அதிகரித்தது.
சீனாவின் ஹிபெய் பகுதியில் முட்டைகோஸ் அழுகாமல் பாதுகாக்க formaldehyde நச்சு ரசாயனம் பயன்படுத்தப்பட்டது உறுதியானது.
முட்டைகோஸ்கள் அந்த ரசாயனத்தில் நனைத்து எடுக்கப்பட்டன.
அந்தக் காணொளி இணையத்தில் பரவியது.
அதன்பிறகு சீனாவில் நாடு முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன.
Formaldehyde ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது.

ஆதாரம் : CNA