Skip to main content
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 60ஆம் ஆண்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 60ஆம் ஆண்டு - விமரிசையான கொண்டாட்டம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற 60ஆம் ஆண்டை இவ்வாண்டு மிகக் கோலாகலமாகக் கொண்டாடவிருக்கிறது.

"நமது சிங்கப்பூரை ஒன்றாக உருவாக்குவோம்" என்ற கருப்பொருளை ஒட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறும்.

ஆண்டு முழுவதும் நடக்கும் நிகழச்சிகள் சிங்கப்பூரில் நாம் கொண்டுள்ள பொதுவான பண்புகளை நினைத்துப் பார்க்க மக்களுக்கு வாய்ப்பாக அமையும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

ஒன்றாகச் சேர்ந்து அனைவருக்குமான எதிர்காலத்தை உருவாக்கவும் அது வாய்ப்பளிக்கும் என்றார் அவர்.

கொண்டாட்டங்களின் ஒரு தொடக்கமாக இம்மாதம் வசதிகுறைந்தோருக்கு நன்கொடைத் திரட்டு இயக்கம் ஆரம்பமாகிறது.

பிறகு சிங்கே ஊர்வலம் நமது பலதரப்பட்ட கலாசாரங்களைக் கண்ணுக்கு விருந்தாகக் கொண்டுவரும்.

நமது முன்னோடித் தலைமுறைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளும் உண்டு.

தேசிய தினக் கொண்டாட்டத்திலும் மக்களைக் கவரும் பலவற்றை எதிர்பார்க்கலாம்.

குடியிருப்புப் பேட்டைகளிலும் கொண்டாட்ட உணர்வில் மக்கள் திளைக்க நிகழ்ச்சிகள் வரவிருக்கின்றன.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்