Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

விமானத்துறை நடுவமா... அப்படியென்றால்?

வாசிப்புநேரம் -

அனைத்துலக விமான நடுவம் எனும் நிலையைக் கட்டிக்காக்க, சிங்கப்பூர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.

அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, சுயேச்சை விமானப்போக்குவரத்துத்துறை ஆலோசகர் பிரவின் ராஜிடம்  'செய்தி' பேசியது. 

விமானத்துறை நடுவம் என்றால் என்ன? 

changi ap

  • "அனைத்தையும் உள்ளடக்கியதை" விமானத்துறை நடுவம் என்று கூறலாம்
  • சாங்கி விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. 

சாங்கி விமான நிலையத்தில் இருக்கும் சிறந்த வசதிகள்?

control ctr

  • விமானங்களுக்குப் பராமரிப்பு, பழுதுபார்த்தல், முழுமையாகச் சோதித்தல் (Maintenance, Repair, Overhaul - MRO) முதலிய சேவைகள் வழங்கப்படுகின்றன
  • சிறந்த ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் குழு (Air Traffic Control)
  • விமானத்துறையில் இருப்பவர்களுக்கும் சேர விரும்புவோருக்கும் பல்வேறு கற்றல், பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன
  • இப்படிப்பட்ட பலதரப்பட்ட சேவைகள் வழங்கப்படுவதால் சாங்கி விமான நிலையம் முக்கியமான விமானத்துறை நடுவமாக விளங்குகிறது

சிறந்த விமானத்துறை நடுவமாக விளங்க சிங்கப்பூர் எடுக்கும் முயற்சிகள்?

ads

  • சிறந்த விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட அதிகாரிகள் முனைகின்றனர்
  • விமானத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் முயற்சிகள்
  • மேலும் பல நிறுவனங்களை ஈர்க்க விளம்பரங்களுக்கான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன
  • உள்ளூர் பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் விமானத்துறை சார்ந்த பாடங்களைக் கற்பிக்கின்றன

சிறந்த விமானத்துறை நடுவமாவதில் சிங்கப்பூருக்குப் போட்டியாக இருப்பது?

suvarnabhumi

  • ஹாங்காங் விமான நிலையம்
  • தாய்லந்தின் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம்
  • ஜப்பானின் தோக்கியோவிலுள்ள நரிட்டா அனைத்துலக விமான நிலையம்
  • துபாய் அனைத்துலக விமான நிலையம்

சிங்கப்பூர் சிறந்த விமானத்துறை நடுவமாக விளங்கக்கூடியது என்பதில் ஐயம் ஏதும் இல்லை என்றாலும் தற்போதைய நிலையில் கிருமிப்பரவலுக்கு முந்திய காலக்கட்டத்தில் இருந்த அளவுக்கு மீண்டும் செல்வது சற்றுக் கடினமாக இருக்கலாம்

என்றார் திரு பிரவின்.

என்றாலும், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அதனால் மக்கள் மீண்டும் எப்போதும்போலப் பயணம் செய்யும் காலமும் கூடியவிரைவில் வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்