சிங்டெல் வாடிக்கையாளர்களுக்கு SG Alert சோதனை
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Jeremy Long)
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, SG Alert அமைப்பை வரும் ஞாயிற்றுக்கிழமை (10 மே) சோதனை செய்யவிருக்கிறது.
தீவுமுழுவதும் உள்ள சிங்டெல் (Singtel) பயனீட்டாளர்களுக்கு அது பொருந்தும்.
நண்பகல் 12 மணிக்கு அமைப்பு சோதனை செய்யப்படும்.
அவசரகால எச்சரிக்கை அமைப்பை நாடு முழுவதும் செயல்படுத்துவதன் ஒருபகுதியாக சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பெரிய அளவிலான தீ விபத்துகள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், இதர ஆபத்துகளின்போது பொதுமக்களுக்கு விரைவாகத் தகவல் தெரிவிக்க SG Alert அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சோதனையின்போது சிங்டெல் கட்டமைப்பைப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை கிடைக்கும்.
eSIM பயன்படுத்தும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் அது பொருந்தும்.
சிங்டெல் கட்டமைப்பைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் Gomo, Zero1 போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்துவோருக்கும் எச்சரிக்கை கிடைக்கும்.

ஆதாரம் : CNA