Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிந்தான், பாத்தாம் தீவுகளுக்கு வாரந்தோறும் பயணம் மேற்கொள்ளும் படகுப் பயணிகளின் எண்ணிக்கை 600

வாசிப்புநேரம் -

பிந்தான், பாத்தாம் (Bintan, Batam) தீவுகளுக்கு வாரந்தோறும் போய்வரும் படகுப் பயணிகளின் எண்ணிக்கை 600ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்தான், பாத்தாம் தீவுகளுக்குப் போய்வரும் பயணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் S ஈஸ்வரன் (S Iswaran) எழுத்துபூர்வமாக அதற்குப் பதிலளித்தார்.

2019ஆம் ஆண்டில் பிந்தான், பாத்தாம் தீவுகளுக்கு வாரந்தோறும் சென்றுவந்த பயணிகளின் எண்ணிக்கை 146,000ஆக இருந்தது.

இவ்வாண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப் பயணிகளுக்கான சிறப்புப் பயண ஏற்பட்டை இந்தோனேசியா தொடங்கியதிலிருந்து வாரந்தோறும் பயணிகளின் எண்ணிக்கை 600ஆக உள்ளது.

சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளும் கட்டாயத்தை நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.

அத்தகைய பயணிகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

அதுகுறித்த மேல்விவரங்கள் தயாரான பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்