Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரில் இன்று புதிதாக 52 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் 24 பேருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று மொத்தம் 52 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: சிங்கப்பூரில் இன்று புதிதாக 52 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் 24 பேருக்குப் பாதிப்பு

(படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் இன்று மொத்தம் 52 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 30-ஆம் தேதிக்குப் பிறகு, இதுவே ஆக அதிகமான அன்றாட எண்ணிக்கை.

சமூக அளவில் 24 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அவர்களில் 20 பேருக்கு, முன்னதாகக் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பிருந்தது.

13 பேர், சாங்கி விமான நிலைய நோய்த்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.

சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர், ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.

28 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

அவர்கள், இங்கு வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் 19 பேர், சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 61,505.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்