Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சென்ற ஆண்டு 21,537 பேருக்குச் சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட்டது

வாசிப்புநேரம் -

சென்ற ஆண்டு 21,537 பேருக்குச் சிங்கப்பூர்க் குடியுரிமை வழங்கப்பட்டது.

அவர்களில் 6 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்களான பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள்.

33,435 பேருக்கு நிரந்தரவாசத் தகுதி அளிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை அதிகம்.

புதிதாகக் குடியுரிமை பெற்றவர்கள் சிங்கப்பூரர்களான குடும்பத்தார் உள்ளவர்கள் அல்லது இங்குப் படித்தவர்கள் அல்லது இங்கு வேலை பார்த்துக்கொண்டு வசித்து வருபவர்கள்.

புதிதாகக் குடியுரிமை பெற்ற பெரியவர்களில் பெரும்பாலானவர்கள் இதற்கு முன்னர் நிரந்தரவாசிகளாக இருந்தவர்கள்.

சிங்கப்பூரில் நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சுமார் 500,000ஆக உள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் 25 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள். 

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்