Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நேற்று 3,155 பேருக்கு COVID-19 தொற்று - மிதமான அறிகுறிகள் கொண்டோரும் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் புதிதாய் 3,155 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில்...

  • உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 2,794
     
  • வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 361

சுகாதார அமைச்சு வரையறுத்துள்ள இரண்டாவது நடைமுறையின் மூலம் அடையாளம் காணப்பட்டோர், மொத்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட்டதால், இதற்கு முன் பதிவான எண்ணிக்கையைவிட அது அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் மூலம் சிங்கப்பூரில் நோய்ப்பரவல் நிலவரத்தை இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) கூறினார்.

இரண்டாவது நடைமுறையின் மூலம் அடையாளம் காணப்படுவோருக்கு மிதமான அறிகுறிகள் தென்படும் அல்லது அறிகுறிகள் அறவே இருக்காது.

ஆகவே, இனி ஒவ்வொரு நாளும், 'PCR பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டோர்', 'இரண்டாவது நடைமுறையின் மூலம் அடையாளம் காணப்பட்டோர்' என இரு தொகுப்புகளாகத் தகவல்கள் வெளியிடப்படும்.

இரண்டாவது நடைமுறையின் மூலம் அடையாளம் காணப்பட்டோர்: 1,539

அவர்களில்....

  • உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,516
     
  • வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 23


PCR பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டோர்: 1,616

  • உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,278
     
  • வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 338


வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 2.70

நேற்று முன்தின (20 ஜனவரி) நிலவரப்படி அது 2.17 ஆக இருந்தது.

வாராந்திர நோய்த்தொற்று விகிதம்

வாராந்திர நோய்த்தொற்று விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.

சுருக்கமாகப் பார்க்க

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 307,813.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்