சிங்கப்பூரில் புதிதாக 945 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் - 832 பேருக்கு ஓமக்ரான் தொற்று

(கோப்புப் படம்: Gaya Chandramohan)
சிங்கப்பூரில் புதிதாக 945 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில்...
- உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 582
- வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 363
நோய்த்தொற்று உறுதியானவர்களில் மேலும் 832 பேரிடம் ஓமக்ரான் வகைக் கிருமி உறுதிசெய்யப்பட்டது.
- அவர்களில் 289 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
- 543 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.
- வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 1.38
வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 290,030.