Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செப்டம்பருக்குப் பிறகு, முதன்முறையாக 2க்கு மேல் அதிகரித்திருக்கும் வாராந்திர நோய்த்தொற்று விகிதம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் புதிதாக 1,472 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில்...

உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,133

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 339

நோய்த்தொற்று உறுதியானவர்களில் மேலும் 1,001 பேரிடம் ஓமக்ரான் வகைக் கிருமி உறுதிசெய்யப்பட்டது.

அவர்களில் 49 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்;

952 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 2.17

நேற்று முன்தின (19 ஜனவரி) நிலவரப்படி அது 1.96 ஆக இருந்தது.

வாராந்திர நோய்த்தொற்று விகிதம்

வாராந்திர நோய்த்தொற்று விகிதம் என்பது கடந்த ஒரு வாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.

சுருக்கமாகப் பார்க்க

சிங்கப்பூரின் வாராந்திர நோய்த்தொற்று விகிதம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதிக்குப் பிறகு, முதன்முறையாக நேற்று இரண்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

சென்ற வாரத்தைவிட இவ்வாரம் பதிவான நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 297,549.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்