Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்று காரணமாக 86 வயது மாது மாண்டார்

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்று காரணமாய் 86 வயது மாது மாண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்று காரணமாக 86 வயது மாது மாண்டார்

(கோப்புப் படம்: Facebook/Khoo Teck Puat Hospital)

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்று காரணமாய் 86 வயது மாது மாண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவருக்குக் கிருமித்தொற்று இருப்பது ஏப்ரல் 30-ஆம் தேதி கண்டறியப்பட்டது.

கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் அவர் வேறொரு காரணத்துக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது அவரிடம் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த மாது இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் அவருக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

அவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 34-க்கு உயர்ந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்