Skip to main content
Culture Pass
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Culture Pass - 400,000 பேர் $30 மில்லியன் பயன்படுத்தினர்

வாசிப்புநேரம் -
Culture Pass - 400,000 பேர் $30 மில்லியன் பயன்படுத்தினர்

(படம்: Singapore Chinese Orchestra/Facebook)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Culture Pass கலாசார மானியத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டாகும் நிலையில் 400,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் 30 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பயன்படுத்தியுள்ளனர்.

நேற்று முந்தினம் (31 ஆகஸ்ட்) வரை அதில் 2.9 மில்லியன் வெள்ளி சிங்கப்பூர் இலக்கியப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டன.

1.6 மில்லியன் வெள்ளி உள்ளூர்ப் படங்களில் செலவிடப்பட்டன.

அதைப் பயன்படுத்தியோரிடம் நடத்தப்பட்ட கருத்தாய்வில் 10இல் 7 பேர் கடந்த ஐந்தாண்டுகளில் உள்ளூர்க் கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்குச் சென்றதில்லை என்று தெரியவந்தது.

ஆனால் 10இல் 9 பேர், Culture Pass திட்டத்துக்குப் பிறகு அத்தகைய நிகழ்ச்சிகளுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொகையை ஆக அதிகமாகப் பயன்படுத்தியவர்கள் இளையர்கள்.

ஆகக் குறைவாகப் பயன்படுத்தியது மூத்தோர்.

அவர்கள் தொகையை எளிதில் பயன்படுத்த உதவக் குழுப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

அதற்கென புதிய தளம் அறிமுகம் செய்யப்படும்.

2028ஆம் ஆண்டு இறுதிவரை சிங்கப்பூரர்கள் அந்த 100 வெள்ளிப் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்