Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்ப் பொருளியல் இவ்வாண்டு 6.9% வளர்ச்சி காணும் - கட்டுமானத்துறையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் : நிபுணர்கள் முன்னுரைப்பு

சிங்கப்பூர்ப் பொருளியல் இவ்வாண்டு 6.9% வளர்ச்சி காணும் - கட்டுமானத்துறையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் : நிபுணர்கள் முன்னுரைப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்ப் பொருளியல் இவ்வாண்டு 6.9% வளர்ச்சி காணும் - கட்டுமானத்துறையின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் : நிபுணர்கள் முன்னுரைப்பு

(கோப்புப் படம்)

தனியார்த்துறைப் பொருளியல் நிபுணர்கள் இவ்வாண்டுக்கான சிங்கப்பூர்ப் பொருளியல் முன்னுரைப்பை மீண்டும் உயர்த்தியுள்ளனர்.

சிங்கப்பூர்ப் பொருளியல் இந்த ஆண்டு 6. 9 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த எதிர்பார்ப்பு அரசாங்கத்தின் ஆக அண்மை முன்னுரைப்பான சுமார் 7 விழுக்காட்டுடன் ஒத்துள்ளது.

ஆனால் கடந்த செப்டம்பரில் அவர்கள் பொருளியல் வளர்ச்சி 6.6 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தனர்.

கட்டுமானத்துறையின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகம் இருக்கும் என்பதால் சிங்கப்பூரின் ஒட்டுமொத்தப் பொருளியல் வளர்ச்சியும் மேம்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத்துறை 21 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே அது சுமார் பதினாறரை விழுக்காடு வளரச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.

மேலும் நிதி, காப்புறுதித் துறைகளும் நல்ல வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மொத்த விற்பனை, சில்லறை வர்த்தகம் முதலியவையும் மேம்பட்ட வளரச்சியைக் காணும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் குடியிருப்பு, உணவுச் சேவைகளின் வளர்ச்சி ஒளிமிக்கதாய் இருக்காது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 கிருமித்தொற்றின் மோசமான சூழல், பொதுச்சுகாதாரக் கட்டுப்பாடுகள் முதலியவை பொருளியல் வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்