Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 இதற்கு முன்னர் இருந்ததா என்பதை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்க உதவும் சிங்கப்பூர்க் கருவி

COVID-19 இதற்கு முன்னர் இருந்ததா என்பதை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்க உதவும் சிங்கப்பூர்க் கருவி

வாசிப்புநேரம் -
COVID-19 இதற்கு முன்னர் இருந்ததா என்பதை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்க உதவும் சிங்கப்பூர்க் கருவி

படம்: GenScript Biotech

COVID-19 கிருமித்தொற்று இதற்கு முன்னர் ஒருவருக்கு ஏற்பட்டிருந்ததா என்பதை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்க உதவும் சோதனைக் கருவியை, Duke-NUS மருத்துவக் கல்லூரி உருவாக்கியுள்ளது.

இதுவரை அத்தகைய சோதனை முடிவு தெரிய, குறைந்தது 4 நாள்கள் பிடித்தன.

தடுப்பு மருந்துக்கான மதிப்பீடு செய்வது, தொடர்புத் தடங்களை மேலும் மேம்பட்ட முறையில் கண்டறிவது, கிருமிப் பரவல் நிலைமையைத் தெரிந்து கொள்வது போன்றவற்றில் புதிய கருவி உதவக்கூடும்.

cPass எனப்படும் அந்த விரைவுச் சோதனைக் கருவிக்குச் சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

A*STAR நிறுவனமும், உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான GenScriptஉம் இணைந்து அந்தக் கருவிகளைத் தயாரிக்கும்.

முதலில் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்காக அவை தயாரிக்கப்படும்.

பின்னர் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் சோதனைக் கருவிகளின் உற்பத்தியைப் பெருக்கவும் திட்டமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்