Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொருளியல் நடவடிக்கைகளை மெதுவாகத் திறந்துவிடுவதையே சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர்: புதிய ஆய்வுத் தகவல்

பொருளியல் நடவடிக்கைகளை மெதுவாகத் திறந்துவிடுவதையே சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர்: புதிய ஆய்வுத் தகவல்

வாசிப்புநேரம் -
பொருளியல் நடவடிக்கைகளை மெதுவாகத் திறந்துவிடுவதையே சிங்கப்பூரர்கள் விரும்புகின்றனர்: புதிய ஆய்வுத் தகவல்

(படம்: TODAY)

நோய்த்தொற்றுக்கிடையே சிங்கப்பூர் அதன் பொருளியல் நடவடிக்கைகளை மெதுவாகத் திறந்துவிடுவதையே சிங்கப்பூரர்கள் விரும்புவதாகப் புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நோய்த்தொற்றுக்கு அதிகமானோர் பலியாவதைத் தவிர்க்கவேண்டும் என்று ஆய்வில் கலந்துகொண்டவர்கள் கருதுகின்றனர்.

கொள்கை ஆய்வுக் கழகம் சுமார் 500 பேரிடம் ஆய்வை மேற்கொண்டது.

ஜூலை மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடையே அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொருளியல் நடவடிக்கைகள் மெதுவாகத் திறந்துவிடப்பட்டால் நோய்த்தொற்றுக்குப் பலியாவோர் எண்ணிக்கை குறையும்.

அவை துரிதமாகத் திறந்துவிடப்பட்டால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆய்வில் கலந்துகொண்ட பத்தில் 8 பேர் பொருளியல் நடவடிக்கைகள் மெதுவாகத் திறக்கப்படுவதையே விரும்பினர்.

மீண்டும் திறந்துவிடுவதில் சிங்கப்பூர் சரியான பாதையில் செல்கிறதா என்பதன் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

ஜூலை மாதத்தில் நம்பிக்கை உயரத் தொடங்கியது.

கோவிட் சம்பவங்கள் அதிகரிக்க அதிகரிக்க நம்பிக்கை குறைந்தது.

கடந்த மாதம் அது 56 விழுக்காடாகப் பதிவானது.

அரசாங்கம் நோய்த்தொற்றைக் கையாளும் விதம் திருப்தி அளிக்கிறதா என்று பொதுமக்களிடம் கேட்கப்பட்டது.

செப்டம்பருக்கும் அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்து காணப்பட்ட திருப்தி சென்ற மாதம் மேம்பட்டது.

வழக்கமான பரிசோதனைகள், முகக்கவசம் அணிதல், தடுப்பூசிகள் போன்ற பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் மீது நம்பிக்கை இருப்பதாகப் பத்தில் 9 பேர் கூறினார்.

அவை கிருமி தொற்றுவதைத் தவிர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இருப்பினும் பெரும்பாலோர் நிகழ்ச்சிகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனை, எந்நேரமும் முகக்கவசம் அணிதல் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்