Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் முன்னணி வகிக்கத் தயாராய் இருக்கிறது

வாசிப்புநேரம் -

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் முன்னணி வகிக்கத் தயாராய் இருப்பதாக மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் கூறியுள்ளார்.

2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றம் அறவே இல்லாத இலக்கை அடைவதற்கான சிங்கப்பூரின் திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இவ்வாண்டு பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அரசாங்கக் கொள்கைகளும் தனியார் துறைத் திட்டங்களும் அந்த இலக்கை அடைய வழிவகுக்கும் என்றார் திரு. தியோ.

துமாசிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மரினா பே சாண்ட்ஸில் நடைபெறும்
"Ecosperity" எனும் 3 நாள் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

நீண்டகாலத்துக்குப் போட்டித்தன்மையுடன் இருக்க நிறுவனங்கள் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் திட்டங்களையும் பருவநிலைக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயத்தையும் கருத்திற்கொள்வது அவசியம்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய திட்டங்களுக்கான தேவை அதிகரிக்கிறது.

விரைந்து நடவடிக்கை எடுத்தால்தான் பலனைப் பெறமுடியும் என்றார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு. தியோ.

போக்குவரத்து போன்ற கரிம வெளியேற்றம் அதிகமாக உள்ள துறைகளுக்கான தீர்வுகளை ஆராய்ந்து, பசுமை முயற்சிகளுக்கு நிதியாதரவு பெறுவதில் Ecosperity நிகழ்ச்சி கவனம் செலுத்தும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்