Skip to main content
"சிற்பங்களைக் கைப்படச் செய்த அனுபவம் தேசப் பற்றை ஆழமாக்கியது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"சிற்பங்களைக் கைப்படச் செய்த அனுபவம் தேசப் பற்றை ஆழமாக்கியது"

வாசிப்புநேரம் -
மவுண்ட்பேட்டன் குடியிருப்பாளர்களுக்கும் சிங்கப்பூர் வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம்?

1976ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை
தேசிய தின அணிவகுப்பு பழைய காலாங் தேசிய அரங்கில் நடத்தப்பட்டது.

இன்று வரை அந்தப் பொன்னான நினைவுகள் பல மவுண்ட்பேட்டன் குடியிருப்பாளர்களின் மனத்தில் நிலைத்து நிற்கின்றன.

இவ்வாண்டு (2025) சிங்கப்பூர் அதன் 60ஆம் நிறைவைக் கொண்டாடுகிறது.

அதனைக் கருத்தில்கொண்டு Temporal Displacement அமைப்பும் மவுண்ட்பேட்டன் சமூக கலை, கலாசார மன்றமும் இணைந்து தேசிய தின அணிவகுப்பை ஒட்டிய சிற்பங்களைக் கைப்படச் செய்துள்ளனர்.

இவ்வாண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக இந்தக் கலைப்படைப்பு சிங்கப்பூர்க் கலை வாரத்திலும் (SAW), PAssionArtsஇலும் இடம்பெறுகிறது.

அதில் பங்கெடுத்த ருக்மணி தமது அனுபவங்களைச் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டார்.

மவுண்ட்பேட்டன் குடியிருப்புப் பகுதி சிங்கப்பூர் வரலாற்றில் ஆற்றிய பெரும் பங்கைப் பற்றி உணர்வுகள் மேலோங்கப் பேசினார் ருக்மணி.

ஜனவரி 17 முதல் 26ஆம் தேதி வரை சிங்கப்பூர் கலை வாரம் நடைபெறுகிறது. மக்கள் Sports Hubக்குச் சென்று அந்தச் சிற்பங்களைக் கண்டு ரசிக்கலாம். வேண்டுமென்றால் அவற்றிற்கு வண்ணம் பூசலாம். அத்துடன் சிங்கப்பூருக்கு ஒரு
கடிதம் எழுதி வைக்கலாம்.

தமிழ்நாட்டில் பிறந்த ருக்மணி 2002ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்து பின்னர் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றுள்ளார்.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்