“The Collective Canvas" - சிங்கப்பூரின் 60 ஆண்டுப் பயணத்தைப் பிரதிபலிக்கும் சிறப்பு ரங்கோலிக் கலைப் படைப்பு
வாசிப்புநேரம் -
வெவ்வேறு சமயங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தவேண்டும்; அவ்வாறு செய்தால் நமது சின்னஞ்சிறு சிவப்புப் புள்ளி சிங்கப்பூரர்களுக்கும் எதிர்வரும் தலைமுறையினருக்கும் தொடர்ந்து பிரகாசமாக இருக்கும் என்று துணைப்பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) கூறியிருக்கிறார்.
இந்து அறக்கட்டளை வாரியமும் (HEB) இந்து ஆலோசனை வாரியமும் (HAB) இணைந்து சிங்கப்பூர் சீனக் கலாசார நிலையத்தில் நடத்திய சமயங்களுக்கு இடையிலான தீபாவளி தேநீர் விருந்து நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
சமயத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், அடித்தள அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட பல பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கும் வண்ணம் நிகழ்ச்சி அமைந்தது.
பலதரப்பட்ட பின்னணிகளைச் சேர்ந்த 25 பேர் “The Collective Canvas" எனும் பெயரில் ஒரு சிறப்பு ரங்கோலிக் கலைப் படைப்பை அமைத்திருந்தனர்.

ரங்கோலிக் கலைஞர் திருவாட்டி விஜயா மோகன் (Vijaya Mohan) அதனை மேற்பார்வையிட்டார்.
அவர்கள் சிங்கப்பூரின் 60 ஆண்டுப் பயணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 60 விதமான பொருள்களைப் பயன்படுத்திக் கண்கவர் கலைப்படைப்பை அழகாய் உருவாக்கியிருந்தனர். அதனைத் திரு கான் வெளியிட்டார்.
ஆடல் பாடல் அங்கங்கள் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்தளிக்கப்பட்டது.

ஆதாரம் : Mediacorp Seithi