Skip to main content
$3 பில்லியன் மோசடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

$3 பில்லியன் மோசடி - 10 சொகுசு வீடுகள் ஏலத்தில்

வாசிப்புநேரம் -
$3 பில்லியன் மோசடி - 10 சொகுசு வீடுகள் ஏலத்தில்

(படம்: SRI)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் 3 பில்லியன் வெள்ளி பண மோசடிச் சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆடம்பர வீடுகள் இம்மாதம் 23ஆம் தேதி ஏலத்தில் விடப்படும்.

சுமார் 2.2 மில்லியன் வெள்ளியில் தொடங்கி கிட்டத்தட்ட 6.7 மில்லியன் வெள்ளிவரை வீடுகள் விலை போகலாம்.

அந்த 10 வீடுகள் ரிவர் வேலி (River Valley), தஞ்சோங் பாகார் (Tanjong Pagar) வட்டாரங்களில் அமைந்துள்ளன.

4 வீடுகள் Wallich Residence கூட்டுரிமை வீட்டிலும், 6 வீடுகள் Martin Modern கூட்டுரிமை வீட்டிலும் உள்ளன.

வீடுகளில் ஆகச் சிறியது 764 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஆகப் பெரிய வீட்டின் பரப்பளவு 1,733 சதுர அடி.

SRI நிறுவனம் அவற்றின் விற்பனையை நடத்தும்.

பண மோசடிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 80க்கும் அதிகமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றுடன் 1,000க்கும் அதிகமான ஆடம்பரப் பொருள்களும் பிடிபட்டதாகக் கணக்காய்வு நிறுவனமான Deloitte தெரிவித்தது.

அவற்றின் ஏல விற்பனை இம்மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை நடைபெறும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்