Skip to main content
சிங்கப்பூர் பங்கு பரிவர்த்தனை இடையூறு குறித்த விசாரணை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் பங்கு பரிவர்த்தனை இடையூறு குறித்த விசாரணை

சிங்கப்பூர் பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் சென்ற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஏற்பட்ட  முக்கிய இடையூறு குறித்த விசாரணைகளில் உதவ, சுயேச்சையான நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் பங்கு பரிவர்த்தனை இடையூறு குறித்த விசாரணை

சிங்கப்பூர் பங்கு பரிவர்த்தனை நிலையம்.

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பங்கு பரிவர்த்தனை (Singapore Exchange) நிலையத்தில் சென்ற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி ஏற்பட்ட  முக்கிய இடையூறு குறித்த விசாரணைகளில் உதவ, சுயேச்சையான நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த விவகாரத்தின் தொடர்பில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு அவர்களை நியமித்துள்ளது. தனது தொழில்நுட்பம், செயல்பாட்டு நிர்வாகம், தொடர்புமுறைகள் ஆகியவற்றின் மறு ஆய்வை விசாரணை உள்ளடக்கும் என்று பங்கு பரிவர்த்தனை நிலையம், தனது அறிக்கையில் தெரிவித்தது.

அந்த சுயேச்சையான நிபுணர்கள், சென்ற மாதம் பணியைத் தொடங்கினர். தங்கள் கண்டுபிடிப்புகளையும், பரிந்துரைகளையும் அவர்கள் விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பார்கள். பிறகு விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை, வரும் மார்ச் மாதத்துக்குள், பங்கு பரிவர்த்தனை நிலைய நிர்வாகக் குழுவிடமும், சிங்கப்பூர் நாணய வாரியத்திடமும் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்