Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆசிய விளையாட்டுகள்: கோல்ஃப் போட்டியில் வெண்கலம் வென்று சிங்கப்பூரின் ஷேனன் டான் சாதனை

வாசிப்புநேரம் -
ஆசிய விளையாட்டுகள்: கோல்ஃப் போட்டியில் வெண்கலம் வென்று சிங்கப்பூரின் ஷேனன் டான் சாதனை

படம்: CNA/Wallace Woon

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 03 Oct 2026 01:11PM புதுப்பிப்பு : 03 Oct 2026 02:22PM
ஆசிய விளையாட்டுகளின் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஷேனன் டான் (Shannon Tan).

பெண்கள் தனிநபர் பிரிவில் அவர் அந்தப் பதக்கத்தை வென்றார்.

ஜப்பானின் கசுகாய் கன்ட்ரி கிளப்பில் ( Kasugai Country Club East Course) போட்டி நடைபெற்றது.

உலகத் தரவரிசையில் 59ஆம் இடத்தில் உள்ள டான், இறுதிச் சுற்றில் சமவீச்சுக்கு 2 குறைவாக 68 புள்ளிகளைப் பெற்றார்.

உலகத் தரவரிசையில் 291ஆம் இடத்தில் உள்ள இந்தியாவின் பிரணவி ஷரத் அர்ஸ் (Pranavi Sharath Urs) தங்கப் பதக்கம் வென்றார்.

டான், உலகத் தரவரிசையில் 6ஆம் இடத்தில் உள்ள சீனாவின் யின் ருவோனிங்குடன்(Yin Ruoning) சமநிலையில் இருந்தார்.

வெள்ளிப் பதக்கத்துக்கான சுற்றில் யின், டானை வீழ்த்தினார்.

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் சிங்கப்பூர் கோல்ஃப் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் டான்.

2025ஆம் ஆண்டிலும் அவர் சிறப்பாக விளையாடினார்.

ஐரோப்பிய மகளிர் கோல்ஃப் தொடரின் (Ladies European Tour) இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், LET Order of Merit பட்டத்தையும் கைப்பற்றினார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்