மகளிர் ஐரோப்பிய கோல்ஃப் தொடர் - சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்ற முதல் சிங்கப்பூரர்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஐரோப்பியப் பெண்கள் கோல்ஃப் போட்டித் தொடர் ஒன்றின் சிறந்த ஆட்டக்காரர் விருதை முதன்முதலாக சிங்கப்பூரர் ஒருவர் வென்றுள்ளார்.
பருவம் முழுவதும் விளையாடிய சிறந்த ஆட்டக்காரருக்கு European Tour Order of Merit எனும் விருது வழங்கப்படுகிறது.
அதை ஷேனன் டான் (Shannon Tan) வென்று வரலாறு படைத்துள்ளார்.
ஸ்பெயினில் நடந்த இவ்வாண்டின் கடைசிப் போட்டியில் 21 வயது டான் வென்றார்.
அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த மிமி ரோட்ஸை வீழ்த்தி விருதைக் கைப்பற்றினார்.
இந்தப் பருவத்தில் இரு ஐரோப்பியப் போட்டிகளில் டான் வென்றார்.
ஜூன் மாதத்தில் ஜெர்மன் மாஸ்டர்ஸ் போட்டியிலும் அக்டோபரில் இந்தியப் போட்டியிலும் வெற்றி பெற்றார்.
கடந்த பருவத்தில் அவர் ஆறாம் இடத்தில் தொடரை முடித்தார்.
டான் சிங்கப்பூரின் முன்னணி கோல்ஃப் வீராங்கனை.
கடந்த ஆண்டு அவர் தொழில் ரீதியாக கோல்ஃப் விளையாடத் தொடங்கினார்.
ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய சிங்கப்பூரின் முதல் கோல்ஃப் வீராங்கனை அவர்.

ஆதாரம் : CNA