Skip to main content
ஒரு SMSஇல் உங்கள் WhatsApp கணக்கு கைவிட்டுப் போகலாம்...தெரியுமா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

ஒரு SMSஇல் உங்கள் WhatsApp கணக்கு கைவிட்டுப் போகலாம்...தெரியுமா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

OTP எண்ணைப் பகிர்வதில் அதிக கவனம் தேவை என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க அமைப்புகளைப் பிரதிநிதிப்பது போல் வரும் குறுந்தகவல்களைக் (SMS) கவனத்துடன் அணுகவேண்டும் என்றும் அது சொன்னது.

OTP எண்ணை யாரிடமும் பகிரக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியது.

அதையும் மீறிப் பகிர்ந்தால் அந்த WhatsApp தகவல் சேவை வேறு ஒருவர் வசம் செல்ல வாய்ப்புள்ளது.

மூத்த விசாரணை அதிகாரி கலைமாறன் அதை வலியுறுத்தி சில விவரங்களைத் தெரிவித்தார்.

இது அதிகமாக முதியவர்களைப் பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதியவர்கள் பலருக்கு OTP எண் பகிரப்படக்கூடாது என்பது தெரிவதில்லை.

தமது OTP எண்ணைக் கேட்பவர் யார் என்பதை அவர்கள் தீர விசாரிக்க வேண்டும்.

பாதுகாத்துக் கொள்ள வழிகள்?

🛡️ 2 Factor Authorisation எனும் இருமுறை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளும் முறையைப் பயன்படுத்தலாம்.

🛡️ WhatsApp சேவையைக் கணினியில் பயன்படுத்தும்போது அதிலிருந்து மறக்காமல் வெளியேற வேண்டும்; வெளியேறாவிட்டால் கணினியைப் பயன்படுத்தும் அடுத்த நபர் WhatsApp சேவையை ஊடுருவலாம்.

🛡️ ScamShield செயலியைப் கையடக்கத் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்