$49 மில்லியன் எண்ணெய் எரிவாயுத் திருட்டில் உடந்தை-ஒப்புக்கொண்ட Shell நிறுவன முன்னாள் ஊழியர்
புலாவ் புகோம் (Pulau Bukom) தயாரிப்பு ஆலையில் இருந்து 49 மில்லியன் வெள்ளி மதிக்கத்தக்க எண்ணெய் எரிவாயுவைத் திருடுவதற்கு உடந்தையாக இருந்ததை Shell நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

(படம்: REUTERS/Edgar Su)
புலாவ் புகோம் (Pulau Bukom) தயாரிப்பு ஆலையில் இருந்து 49 மில்லியன் வெள்ளி மதிக்கத்தக்க எண்ணெய் எரிவாயுவைத் திருடுவதற்கு உடந்தையாக இருந்ததை Shell நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
எண்ணெய் எரிவாயுவை அந்தத் தயாரிப்பு ஆலையில் இருந்து மற்ற கப்பல்களுக்கு விற்ற கும்பலில், இந்தியாவைச் சேர்ந்த 40 வயது சடகோபன் பிரேம்நாத்தும் ஒருவர்.
2017ஆம் ஆண்டிலும், 2018ஆம் ஆண்டிலும் அத்தகைய திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை ஒப்புக்கொண்டுள்ள Shell நிறுவனத்தின் முதல் ஊழியர் அவர்.
நம்பிக்கை மோசடிக் குற்றத்தில் உடந்தையாக இருந்தது தொடர்பான 4 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள எஞ்சிய 5 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.