SIA புதிய முதல்நிலை, வர்த்தக நிலை இருக்கைகளைப் பொருத்துவதை ஒத்திவைத்தது
வாசிப்புநேரம் -
(படம்: AFP/Roslan Rahman)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA), அதன் Airbus A350-900 ரக விமானங்களில் புதிய முதல்நிலை, வர்த்தக நிலை இருக்கைகளைப் பொருத்துவதை ஒத்திவைத்திருக்கிறது.
அது இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அறிமுகம் காணவிருந்தது.
அது இனி அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருத்தப்படும் என்று நிறுவனம் சொன்னது.
தொழில்துறையில் ஏற்பட்டிருக்கும் விநியோகத் தொடர் கட்டுப்பாடுகள், புதிய இருக்கைகளில் ஒன்றுக்கு வழங்கப்படவிருந்த சான்றிதழ்களில் தாமதம் ஆகியவை அதற்குக் காரணங்கள் என்று நிறுவனம் தெரிவித்தது.
மேம்பாட்டுத் திட்டம் பற்றி 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
Premium economy, economy class ஆகிய பகுதிகளும் புதுப்பிக்கப்படவிருந்தன.
2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிப்புத் திட்டம் நிறைவடையவிருந்தது.

ஆதாரம் : CNA