"ஆகஸ்ட் 2 வரை துபாய்க்கு விமானங்கள் இல்லை" - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
வாசிப்புநேரம் -
படம்: Singapore Airlines
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் சிங்கப்பூர் - துபாய் இருவழி விமானச் சேவை ரத்துக்காலத்தை ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை நீட்டித்துள்ளது.
Facebook பக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் நீடிப்பதால் SQ494 சிங்கப்பூர் - துபாய் விமானச் சேவையும்,
SQ495 துபாய் - சிங்கப்பூர் விமானச் சேவையும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை செயல்படமாட்டா.
முன்னதாக அவ்விரண்டு விமானச் சேவைகளும் இம்மாதம் 31ஆம் தேதி வரை ரத்துச் செய்யப்பட்டிருந்தன.
மத்திய கிழக்கு நிலவரம் தெளிவில்லாமல் இருப்பதால் விமானச் சேவை ரத்துக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரிடமும் அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

ஆதாரம் : CNA