Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பாதிக்கப்பட்ட JetStar Asia ஊழியர்களுக்கு SIA குழுமம் வேலைவாய்ப்புகள் அமைத்துத் தரும்

வாசிப்புநேரம் -
பாதிக்கப்பட்ட JetStar Asia ஊழியர்களுக்கு SIA குழுமம் வேலைவாய்ப்புகள் அமைத்துத் தரும்

FB/Changi Airport

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் பாதிக்கப்பட்ட JetStar Asia ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை அமைத்துத் தரப் போவதாகத் தெரிவித்துள்ளது.

சுமார் 100 விமானிகளும் 200 விமானச் சிப்பந்திகளும் பயனடைவர்.

Jetstar Asiaஉடன் அணுக்கமாய்ப் பணியாற்றுவதாக SIA குழுமத்தின் பேச்சாளர் இன்று கூறினார்.

SIA, Scootஇன் பிரதிநிதிகள் ஜூன் 17 முதல் ஜூன் 19ஆம் தேதிவரை JetStar Asiaவின் அலுவலகத்தில் இருப்பர். வேலைதேட விரும்பும் ஊழியர்களை அவர்கள் சந்தித்துப் பேசுவர் என்றும் கூறப்பட்டது.

நிச்சயமற்ற சூழலில் தங்களால் முடிந்தவரை பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று SIA பேச்சாளர் தெரிவித்தார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்